Saturday, April 29, 2017

பத்ரயோகம் !

பத்ரயோகம் !
********************************************************************
புதன் பகவான் ஆட்சி அல்லது உச்சம் பெற்று லக்னம் அல்லது ராசிக்கு கேந்திரத்தில் இருப்பது .கம்பீர தோற்றம் ,சபைகளில் பேசும் திறமை ,நல்ல பண வருவாய் உண்டு என்று சொல்லி அனைவருக்கும் காலை வணக்கம் !

கிரகங்களின் குணம்


சூரியன் - சத்துவ குணம்
சந்திரன்- சத்துவ குணம்
செவ்வாய்-தமசு குணம்
புதன் - ரஜசு குணம்
குரு - சத்துவ குணம்
சுக்கிரன் - ரஜசு குணம்
சனி - தமசு குணம்
இராகு - தமசு குணம்
கேது - தமசு குணம்
சத்துவ குணம் என்பது நல்ல குணமாகும்.ரஜசு குணம் அல்லது ரஜோகுணம் என்பது காமம்,கோபம் முதலிய ஆத்திரமான குணங்கள்.தமசு குணம் அல்லது என்பது தாதசம் முதலிய கெட்ட குணங்கள் என்பதாம்

Friday, April 28, 2017

அக்ஷய திரிதியை பற்றி மேலும் ஒரு தகவல்

திரேதா யுகம் ஆரம்ப நாளே அக்ஷய திரிதியை ,அந்தநாளிலே பரசுராமரும் அவதரித்தார் ! என்று சொல்லி அனைவர்க்கும் காலை வணக்கம் !

வைநாசிகம் !

ஜென்ம நட்சத்திரத்திற்கு 88 வது பாதம் அதாவது 22 வது நட்சத்திரம் வைநாசிகம் .இந்த 88 வது பாதம் கூடின நட்சத்திர தினம் சுப காரியங்களுக்கு ஆகாது என்று சொல்லி அனைவருக்கும் மாலை வணக்கம் !!!!

Wednesday, April 26, 2017

எந்த பலன்களுக்கு இந்த பாவங்கள் இயங்க வேண்டும் !!

பலன்கள்    இந்த பாவங்கள் இயங்கினால் கிடைக்கும் !!!

ஜனனம் ---1,5,9

அடிப்படை கல்வி --4,11

உயர் கல்வி -5,11

விசேஷ கல்வி -9,11

திடீர் வரவு -2,11,9

திடீர் செலவு -6,8,12

குடும்பத்தில் மகிழ்ச்சி -2,7,5,9

மேடை பேச்சு ,சொற்பொழிவு -2,4,5,9

பொருளாதார நிலை -2,11

வீடு கட்டுதல் -4,11,12

புத்திரர் மேன்மை மனைவி அல்லது கணவர் மரணம் -2,6,7,8


ஸ்ரீ கண்ட யோகம் !!!

ஸ்ரீ கண்ட யோகம் !!!
********************************
லக்னாதிபதி ,சூரியன் ,சந்திரன் கேந்திரம் அல்லது திரிகோணத்தில் தான் சொந்த வீட்டில் அல்லது நட்பு வீட்டில் இருந்தால் ஸ்ரீ கண்ட யோகம் ஆகும் .
அந்த ஜாதகர் சிறந்த ஆன்மிகவாதி ஆகா இருப்பார் .இந்த நேரமும் பஞ்சாட்சரம் ஜபம் செய்பவர்க இருப்பார் .அவர் ஏழைகளுக்கு உதவுபவராக இருப்பார் .ஆன்மிக சக்தி மிகுந்தவராக இருப்பார் என்று சொல்லி அனைவருக்கும் மாலை வணக்கம் !

கஜகேசரி யோகம் !!!!

கஜகேசரி யோகம் !!!!
******************************
சந்திரனுக்கு எதாவது ஒரு கேந்திரத்தில் குரு இருக்க வேண்டும் இது கேச கேசரி யோகம் .இது பொது பலனே ! இதில் குரு பகை வீடு ,நீசம் சனி,செவ்வாய் பார்வை இருந்தால் பூர்ண யோகம் இல்லை .கேஜகேசரி யோகம் பகைவர்கள் வெல்லும் திறமை ,பெயர் ,புகழ் நல்ல வருவாய் உண்டு என்று சொல்லி அனைவர்க்கும் காலை வணக்கம் !!!!!!

விவசாயிகள் இதை கவனிக்கவும் !

#விவசாயிகள் கவனத்திற்கு ***************************************
ஆயில்யம் நட்சத்திரத்தில் #வெற்றிலை கொடி நடவும் .
ரோகினி தோட்ட நிர்மாணம்
பரணியில் கத்திரி செடி வைக்க
சுவாதியில் நெல் ,வரகு ,சோளம் முதலான தானியங்கள் .விதைக்க
மூல நட்சத்திரத்தில் கிழங்குகள் பயிர்கள் செய்ய
அஸ்வினி கமுகு ,#தென்னை ,பனை முதலான மரங்கள் வைக்கவும்
பரணியில் பயிர் குழி போடவும்
கார்த்திகையில் காட்டு மரங்கள் பயிர் இடவும்
ரோஹிணியில் தோப்புகள் அமைக்கவும்
மிருகசிர்ஷம் நட்சத்திரத்தில் தேக்கு போன்ற மஹா விருச்சங்கள் பயிர் இடவும்
புனர் பூசத்தில் சர்க்கரை வள்ளி கிழங்கு போன்ற படரும் கிழங்கு பயிர் இடவும் (கடலை உட்பட )
பூச நட்சத்திரத்தில் வாழை ,கரும்பு பயிர் இடவும்
என்று சொல்லி அனைவருக்கும் மாலை வணக்கம் !!!

Wednesday, April 5, 2017

திசா பலன்களில் கருத்தில் கொள்ளவேண்டியது

ஒரு கிரகம் லக்ன ரீதியாக சுபரானாலும் ,பாவர் ஆனாலும் அக்கிரகம் நின்ற நட்சத்திர நாதன் லக்ன சுபரானால் அக்கிரகத்தின் திசா காலத்தில் இயங்கும் சுப பாவங்கள் பரிபூர்ண சுப தன்மையுடனும் ,அசுப பாவங்கள் மதிம சுப தன்மையுடனும் இருக்கும் .
ஒரு கிரகம் லக்ன ரீதியாக சுபரானாலும் ,பாவர் ஆனாலும் அக்கிரகம் நின்ற நட்சத்திர நாதன் லக்ன அசுபரானால் அக்கிரகத்தின் திசா காலத்தில் இயங்கும் சுப பாவங்கள் மதிம அ சு ப தன்மையுடனும் ,அசுப பாவங்கள் பரி பூர்ண அசுப தன்மையுடனும் இருக்கும்
என்று கூறி அனைவருக்கும் காலை வணக்கம்

கால சர்ப்ப யோகம்

கால சர்ப்ப யோகம்
ராகு ,கேது உள்ளாக கிரகங்கள் அமையிந்து லக்ன சுபரின் சாரம் அல்லது குருவின் தொடர்பு பெற்றால் அந்த ஜாதகம் கால சர்ப்ப யோகா ஜாதகம் ஆகும் .
உரிய காலத்தில் விவாகம் ,சிறப்பான கல்வி ,பொருள் வரவு ,புதையல் யோகம் ,பட்டம் பதவிகள் தேடி வரும் .

ஜோதிட சாஸ்திரத்தில் சுப ,அசுப சகுனங்கள் தெரிந்து கொள்வோமா !

                                                 நண்பர்களே நமது நண்பர்களுக்கு சகுனம் என்பது தெரியும் அதில் எது சுப எது  ...